எல்பில் போட்டிகளில் பங்குபற்றிய வடமாகண வீரர்களுக்கு யாழில் கௌரவிப்பு - Yarl Voice எல்பில் போட்டிகளில் பங்குபற்றிய வடமாகண வீரர்களுக்கு யாழில் கௌரவிப்பு - Yarl Voice

எல்பில் போட்டிகளில் பங்குபற்றிய வடமாகண வீரர்களுக்கு யாழில் கௌரவிப்பு
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணம் சார்பில் யெப்னா ஸ்ரலியன்ஸ் அணிக்காக பங்கு கொண்ட வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யூரா நிறுவன அனுசரணையுடன் யாழ் துடுப்பாட்ட சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சி அரியாலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட ஆக்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள் மேள வாத்தியம் முழங்க நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜேராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட ரதீபன் அவர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post