யாழில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 பேர் பாதிப்பு - மாவட்ட நிலைமை குறித்து அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள் - Yarl Voice யாழில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 பேர் பாதிப்பு - மாவட்ட நிலைமை குறித்து அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள் - Yarl Voice

யாழில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 பேர் பாதிப்பு - மாவட்ட நிலைமை குறித்து அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில்  தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் ரீம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள்  அமைக்கப்பட்டு  1025 குடும்பங்களை சேர்ந்த 3058  நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,  39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற்பகல் வரை மழை தொடருமாக வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post