பெல்ஜியத்தில் முதல்நபராக 96 வயது முதியவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது! - Yarl Voice பெல்ஜியத்தில் முதல்நபராக 96 வயது முதியவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது! - Yarl Voice

பெல்ஜியத்தில் முதல்நபராக 96 வயது முதியவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது!


பெல்ஜியத்தில் கொரோனா தடுப்பூசி முதல்நபராக 96 வயது முதியவர் ஒருவருக்கு போடப்பட்டுள்ளது.

பயோஎன்டெக்- ஃபைசர் தடுப்பூசி தயாரிக்கப்படும் இடமான புவர்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் ஜோஸ் ஹெர்மன்ஸ் என்பவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தமைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜோஸ் ஹெர்மன்ஸ் தனது இரண்டாவது ஃபைசர் தடுப்பூசியை மூன்று வார காலத்திற்குள் பெறுவார்.

தடுப்பூசி போட்டப்ட்டதையடுத்து ஊடகங்களிடம் பேசிய முதியவர் மருந்து செலுத்தப்பட்டபிறகு 30 வயது நபர் போல உணர்வதாக குறிப்பிட்டார்.

திங்களன்று முதன்முதலில் தடுப்பூசி போடப்பட்டவர்களில்இ 102 வயதான வாலூன் பெண்ணான ஜோசெபா டெல்மோட் மற்றும் பிரஸ்ஸல்ஸில் பெயரிடப்படாத ஒரு முதியவர் ஆகியோர் அடங்குவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post