இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice

இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்துஇனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஒவ்வொரு மனிதனுடைய சமய விழுமியங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மத நம்பிக்கை ஜனாசாக்களை அடக்கம் செய்வது உலகத்தில் மற்ற நாடுகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லை மிகப்பெரும் தொகையாக இறந்தவர்களின் உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். 

கொவிட் 19 தாக்கத்தினால் இறந்தவர்களை புதைப்பது எந்த விதத்திலும் ஆபத் து இல்லை என்பது விஞ்ஞான ரீதியில் தவறு என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை.

ஆகவே அரசியல் நோக்கங்கள் இனவாத நேக்கங்களை விடுத்து இந்த அரசு உடனடியாக முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான உத்தரவவுகளை பிறப்பித்து அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post