பேண்தகு தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல் வவுனியா வளாகத்தின் ஆய்வு மாநாடு நாளை! - Yarl Voice பேண்தகு தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல் வவுனியா வளாகத்தின் ஆய்வு மாநாடு நாளை! - Yarl Voice

பேண்தகு தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல் வவுனியா வளாகத்தின் ஆய்வு மாநாடு நாளை!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது வருடாந்த ஆய்வு மாநாடு பம்பைமடுவில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீட மண்டபத்தில் நாளை 02 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி (திருமதி) அ. நந்தகுமாரன் ஆகியோரின் இணைத் தலைமையில் "நிலையான தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல்" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டுக்கு விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், 

முதன்மைப் பேச்சாளர்களாக மொரட்டுவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஜித் டி அல்விஸ் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.சி.என். ராஜேந்திரா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டில் ஐந்து அமர்வுகளாக 33 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.  

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுடன், நிகழ்வை சூம் தொழில் நுட்பத்தின் மூலமாக ஒலிபரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நிகழ்வின் இணைப்பாளர் கலாநிதி எஸ்.கிருஷாந் தெரிவித்துள்ளார்.     

0/Post a Comment/Comments

Previous Post Next Post