உள நெருக்கடி, விரக்தி ஏற்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்க அபயம் அழைப்பு சேவை யாழில் ஆரம்பம் - Yarl Voice உள நெருக்கடி, விரக்தி ஏற்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்க அபயம் அழைப்பு சேவை யாழில் ஆரம்பம் - Yarl Voice

உள நெருக்கடி, விரக்தி ஏற்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்க அபயம் அழைப்பு சேவை யாழில் ஆரம்பம்



"அபயம் அழைப்பு சேவை". உளநெருக்கடி, விரக்தி ஏற்படுகின்ற நிலையில் தொடர்பு கொள்ளுகின்றவர்களுக்கு
24 மணி நேர வைத்திய ஆலோசனை சேவை. எதிர்வரும் 15 மார்கழி தொடக்கம் சேவை முழு அளவில் நடைமுறைக்கு வரும்.

- - -      071 071 2345    - - -

இன்று வைபவரீதியாக மேற்படி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன் மனநல வைத்திய நிபுணர்கள் Dr. சிவயோகன்  Dr.சிவதாஸ் Dr பிரேமகிருஷ்ணா Dr.சிவன்சுதன்  Dr. நளாயினி Dr.கன்னங்கரா Dr. கஜந்தன் Dr.துஷ்யந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது பகுதிகளில் தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இவற்றில் பல இழப்புகளை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும்.

உள்ள நெருக்கடி ஏற்படுகின்ற போது மேற்படி தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அபயம் நிறுவனம் இதற்கான முழு அனுசரணையும் செய்கின்றது.

www.abayam.org



















0/Post a Comment/Comments

Previous Post Next Post