யாழ்.திருநெல்வேலியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் - Yarl Voice யாழ்.திருநெல்வேலியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் - Yarl Voice

யாழ்.திருநெல்வேலியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம்  சேர்ச் வீதி  திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு  இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால்  வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  யாழ்பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் சேர்ச் வீதி  திருநெல்வேலி கிழக்கில் வீதியில் வசிக்கும் ரட்னசிங்கம் அகிலன் என்பவரின் வீட்டில்  நேற்று (08-12-2020) செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு   இனந்தெரியாத வாள்வெட்டு கும்பலால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த  கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டின் உரிமையாளரால் நள்ளிரவு பொலிஸ் நிலையம் சென்று குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.


0/Post a Comment/Comments

Previous Post Next Post