சின்னத்திரை நடிகை இன்று அதிகாலை தற்கொலை - Yarl Voice சின்னத்திரை நடிகை இன்று அதிகாலை தற்கொலை - Yarl Voice

சின்னத்திரை நடிகை இன்று அதிகாலை தற்கொலைபிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார்.

அதிகாலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post