யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை பி . சி. ஆர் பரிசோதனை - முடக்கப்படுமா சந்தை? - Yarl Voice யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை பி . சி. ஆர் பரிசோதனை - முடக்கப்படுமா சந்தை? - Yarl Voice

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை பி . சி. ஆர் பரிசோதனை - முடக்கப்படுமா சந்தை?

மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா. இந்த தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் நேரடியாக தொடர்புகளை பேநீயவர்களுக்கு நாளை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வுள்ளது 

யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறித்த தொற்றுகுள்ளான வருடன் நேரடித் தொடர்புகளை பேணி யவர்களுக்கு நாளையதினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வுள்ளதாக  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.
 
மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக  PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்,    PCR  சோதனைக்குட்படுத்தப்பட்டார்
 
இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளான வர் சகல பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில்  நாளையதினம் அவருடன் தொடர்பு பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதனடிப்படையில்

குறித்த சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு  ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post