ஒரு வாரமாகியும் வழமைக்கு திரும்பாத பாடசாலைகள்.. - Yarl Voice ஒரு வாரமாகியும் வழமைக்கு திரும்பாத பாடசாலைகள்.. - Yarl Voice

ஒரு வாரமாகியும் வழமைக்கு திரும்பாத பாடசாலைகள்..
கொரோனா அச்சத்தின் பின்பு பாடசாலைகள் மீள ஆரம்பித்து ஒரு வாரம் கடந்துவிட்ட போதிலும் மாணவர்களின் வரவு வீதம் 60 தாண்டவில்லை எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

கொரோனாத் தாக்கத்தின் பின்பு கடந்த 23-11-2020 அன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களின் வரவு நேற்றுவரை மிகவும் மந்தமாகவே உள்ளது. இதன்ஙடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த 23ஆம் திகதி 49 வீத வரவு கானப்பட்டது. இது தேற்றும் 60 வீதமாகவே கானப்பட்டது.

இதன் காரணமாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் சீராக முன்கொண்டு செல்லப்படுவதில் தொடர்ந்தும் இடையூறாகவே இவ் விடயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் எதிர் வரும் வாரத்தில் மாணவர் வரவை அதிகரிக்க கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post