நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு கூட்டமைப்பு சார்பில் மதுசுதனை நிறுத்த தீர்மானம் - Yarl Voice நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு கூட்டமைப்பு சார்பில் மதுசுதனை நிறுத்த தீர்மானம் - Yarl Voice

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு கூட்டமைப்பு சார்பில் மதுசுதனை நிறுத்த தீர்மானம்
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனை நிறுத்துவதற்கு இன்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் தவிசாளர் தனது பதவியை இழந்துள்ளார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்  தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று மாலை  யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post