இன மத ரதியாக பொது மக்களை நசுக்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சிவாஜிலிங்கம் - Yarl Voice இன மத ரதியாக பொது மக்களை நசுக்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சிவாஜிலிங்கம் - Yarl Voice

இன மத ரதியாக பொது மக்களை நசுக்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சிவாஜிலிங்கம்


இன மத ரதியாக பொது மக்களை நசுக்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற பொராட்டத்தில் கலந்து கொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

இன ரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் குறைவாக இருக்கின்றோம் மத ரீதியாக பெளத்தர்களை விட இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கின்றோம்.

 ஆகவே எண்ணிக்கை குறைவு என்று நினைத்துக்கொண்டு இன ரீதியாக அடக்குவது என்பது மத அனுஷ்டானங்களை மீறும் செயல் இஸ்லாம் மதத்தவர்களுக்கு மாத்திரமல்ல கிறிஸ்தவர்களும் உடலங்களை அடக்கம் செய்கின்றார்கள் இந்துக்களிலும் பலர் உடலங்களை புதைக்கின்ற சம்பிரதாயங்களைக் கொண்டுள்ளார் பெளத்தர்களும் அடக்கம் செய்கின்ற சம்பிரதாயத்தைக் கொண்டுள்ளார்கள். 

ஆகவே எல்லாவற்றையும் மிதிக்கவேண்டும் என்று நினைப்பது இன வெறி மற்றும் மதவெறியில் தான் இந்த நாடு இருக்கின்றது என்றே அர்த்தம் இதனை அரச பயங்கரவாதமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இவ்வாறு அடக்கப்பட்ட இனங்களை மதங்களை நசுக்குகின்ற செயற்பாடு இந்த நாட்டில் எப்போதும் நல்லிணக்கத்தையே ஒற்றுமையையே கட்டியெழுப்பாது என்பதைக்கூறிக்கொள்வதுடன் இத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் நிறுத்தவேண்டும்.

 ஆகக்குறைந்தது அவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் ஜெனீவாவில் இப்பிரச்சினையை கொண்டு சென்றுதான் மாற்றவேண்டும் என்ற நிலையை உருவாக்காமல் உடனேயே இப்பிரச்சினையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post