புரேவி புயலினால் இருபாலையில் கடும் பாதிப்பு - Yarl Voice புரேவி புயலினால் இருபாலையில் கடும் பாதிப்பு - Yarl Voice

புரேவி புயலினால் இருபாலையில் கடும் பாதிப்பு
புரேவி புயலினால் ஏற்பட்ட கடும்மழை,பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலைதெற்கு,இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம்,ஞானவைவரவர்கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.

புதியசெம்மணிவீதி,கட்டப்பிராய் கலைமணிவீதி,சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள்,ஒழுங்கைகள் மழை வெள்ளம்தேங்கியுள்ளதால் மக்கள்ளோக்குவரத்துசெய்யமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள்.

பயன்தரு மரங்கள் பலவும் முறிந்துவீழ்ந்துள்ளதுடன் வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்றுகாலைமுதல் குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேசசபைஉறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் மக்களின் நலன்களை பேணும்வகையிலும்,இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கும் கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியானபிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதேசசெயலக அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்கும் பாதிப்புவிபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும்,வெள்ளங்களை வெளியேற்றும்வகையில் துரிசுகளை திறப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்தபகுதி மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்வதற்கு பொதுஅமைப்புக்கள், தன்னார்வகொடையாளர்களின் உதவிகளையும் அப்பகுதிமக்கள் கோரியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post