பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் - Yarl Voice பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் - Yarl Voice

பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம்
ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் 
நந்தன மல்லவராட்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்று(12.12.2020) மு.ப 9.30 மணிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் கட்டளை அதிகாரி பி.ஏ விக்கிரமசிங்க மற்றும் மாவட்ட உதவிப்பணிப்பாளர் கப்டன் நிஷாந்த், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் குறித்த திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு முருகன் மற்றும் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தற்போது வெளிநாடுகளில் இருந்தே பொருட்களை இறக்குமதி செய்யப்படுகிறது இந் நிலமையை மாற்ற தற்போது தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக மொடல் பார்ம் (Model Farm) ஒன்றினை உருவாக்கி இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post