யாழ் மருதனார்மடம் சந்தையை மூடுவதா? உடுவில் பிரதேசத்தை முடக்குவதா? இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னரே தீர்மானம் என்கிறார் சுகாதார பணிப்பாளர் - Yarl Voice யாழ் மருதனார்மடம் சந்தையை மூடுவதா? உடுவில் பிரதேசத்தை முடக்குவதா? இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னரே தீர்மானம் என்கிறார் சுகாதார பணிப்பாளர் - Yarl Voice

யாழ் மருதனார்மடம் சந்தையை மூடுவதா? உடுவில் பிரதேசத்தை முடக்குவதா? இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பின்னரே தீர்மானம் என்கிறார் சுகாதார பணிப்பாளர்
இன்று இரவு வெளியாகும் பிசிஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்தார்

நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் மூவர் கொரோனா தொற்றென இனங்காணப்பட்டுள்ளார்கள் அவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்த வர்கள் ஒருவர் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வசித்துவருபவர் உடுவில்   பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்பரிசோதனையில்  முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

 எனினும் அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை ஒன்றையும் வைத்திருப்பதாகவும் அத்தோடு முச்சக்கர வண்டி சாரதிகள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

 அவரது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் அவருடைய கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவர்கள் தாமாக முன்வந்து தங்களை உடுவில் சுகாதார பிரிவினரிடம்  பதிவு செய்து  பிசிஆர் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும்

 எனவே சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தங்களுடைய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்

 மேலும் இன்றைய தினம் 350பேருக்கு  பிசிஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது அந்த பிசிஆர் பரிசோதனை  முடிவுகள் இரவுவெளியாக உள்ளன அந்த முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மடசந்தையை  மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post