பொன்னாலை - மூளாயில் உள்ள கடலுணவு வியாபாரிகளிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன - Yarl Voice பொன்னாலை - மூளாயில் உள்ள கடலுணவு வியாபாரிகளிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன - Yarl Voice

பொன்னாலை - மூளாயில் உள்ள கடலுணவு வியாபாரிகளிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன

பொன்னாலை மற்றும் மூளாய் பிரதேசங்களில் கடல் உணவு விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் இன்று (30) புதன்கிழமை பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன. 

பொன்னாலை சந்தியில் உள்ள சந்தை வியாபாரிகள் மற்றும் அங்கு கடலுணவுகளைக் கொள்வனவு செய்து வெளி இடங்களில் விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளடங்கலாக 44 பேரிடம் இந்த மாதிரிகள் பெறப்பட்டன. 

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மூளாய் கிராம சேவையாளர் அலுவலகத்தில் வைத்து இந்த மாதிரிகளைப் பெற்றுக்கொண்டனர். 

இந்த மாதிரிகள் யாழ்.போதனா மருத்துவமனை மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் நடைபெறும் சோதனைக்கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post