வலிகாமம் மற்றும் யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு - Yarl Voice வலிகாமம் மற்றும் யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு - Yarl Voice

வலிகாமம் மற்றும் யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு
வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எழுத்துமூல ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் கோரோனா தொற்றுப் பரவல் கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று (டிசெ.14) திங்கட்கிழமை மூடப்பட்டன.

இந்த நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post