இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டின் பலபாகங்களில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்குஇ கிழக்கு வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணம் உட்பட மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணம் உட்பட களுத்துறை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு வட மத்தியஇ வட மேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post