ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல - அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் - Yarl Voice ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல - அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் - Yarl Voice

ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல - அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்சுமந்திரன் தனிநபராக ஐநா விடையங்களை கையாள நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத தோடு ஐநா சுமந்திரன் என்ற தனிநபரின் கோரிக்கைகளை ஏற்று செயற்பாடும் நிறுவனமும் அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
.
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஐநாவில் கால 
 கால நீடிப்பு வழங்கப்படவுள்ளதாான கருத்துக்கள் ஊடகங்களில் வலுப்பெற்று உள்ள நிலையில் சுமந்திரனின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது.

 அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்த  சந்திப்பில்   நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த பழைய தீர்மானத்தை மாற்றம் இன்றி செயற்படுத்துதல் என்ற தோற்றப்பாடான கருத்தின் மூலம்  புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மறுபடியும்
 கால அவகாசம் வழங்கப் போவதான கருத்து உச்ச பெற்றது.

  சுமந்திரன் என்கின்ற நபர் ஆட்சி அதிகாரம் அற்ற ஒரு அமைப்பின் பிரதிநதியாக இருப்பதோடு
 ஐநாவைப் பொறுத்வரை ஆட்சி அதிகாரம் உள்ள அரசுகளின் செயற்பாடுகளை அங்கீகரித்து போகின்ற அமைப்பாக காணப்படுகிறது.

 கடந்த நல்லாட்சியில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய இணை அனுசரணையில் இருந்து தற்போதைய அரசாங்கம் தான் விலகியதாக அறிவித்த போதும் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய நிலைமாறுகால நீதி முதலானன கட்டமைப்புகளை அப்படியே இவ் அரசாங்கம் செயற்படுத்துகிறது .

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட  நீதிக்கான அலுவலகம் உருவாக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அலுவலகங்களின செயற்பாடுகள்  இடம்பெற்றுவருகின்றன.

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் முறை அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 இவ் அழவலகம் இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டது அ 14,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டது.

காணாமல் போன அலுவலகங்களுடன் சேர்ந்து இயங்கிய ஐநா அலுவலகர்களின் காலம் முடிவடைய உள்ள நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்படுமா ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில்  நிலைமாறுகால நீதி என்ற பகுதிக்கு ஒரு நாட்டின் பிணக்குக் காரணமான மூல காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்றுவதன் மூலம் மீண்டும் ஒரு பிணக்கை தவிர்த்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை தொடர்பான மூல காரணத்தை அகற்றுவதோடு கட்டமைப்புசார் மாற்றங்களைக் கொண்டு இனங்களுக்கிடையில் கட்டமைப்புசார் மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும்.

இதற்காக அரசியல் யாப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதியய தொழில்நுட்பத்தில் புதிய தேசத்தை உருவாக்குவதற்காக பொதுமக்கள்  தங்களுடைய முன்மொழிவுகளை வழங்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன் நிலையில் செய்யப்படவேண்டிய கட்டமைப்புசார் மார்க்கம் என்ற அடிப்படையில் அவர்கள் தங்கள் கதவைத் திறந்து வைத்திருக்கிறோம் என்ற தோற்றத்தை வெளியே காட்டுகிறார்கள்.
இம் முறை ஐநா அமர்வில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
 

 இந்தியாவின்  அதானி குழுமத்துக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்த நிலையில் துறை முக   ஊழியர்களின் எதிர்ப்பு எனக் காரணம் காட்டி கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க மறுத்துள்ளது.
இலங்கையின் கிழக்கு முனையத்தில் இருந்து இந்தியா சீனாவை கண்காணிப்பதை விரும்பாத சீனா அதை கொடுப்பதை மறுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி இருக்கலாம் .

அதேபோன்று அமெரிக்கா செய்துகொண்ட மிலேனியம் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது காலனித்துவத்தை இலங்கைமீது தணிப்பதற்காக ஐநா தீர்மானத்தை நெருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


 இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க முற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிரான  தீர்மானம்  வரக்கூடிய நிலைமைகளை அதிகப்படுத்தி இருப்பதாக சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நம்புவதாக தெரிகிறது 

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படாமல் இருக்க  ஒரு தனியான நாடாளுமன்ற உறுப்பினரை கையாள்வதை விட தமிழ் கட்சிகள் ஜெனிவாவை கையாளுவதற்காக ஓரணியில் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post