அதிகரிக்கும் கொரோனா தொற்றால் முடக்கப்படுமா யாழ்ப்பாணம்? பாதிப்பு நிலைமை தொடர்பில் மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice அதிகரிக்கும் கொரோனா தொற்றால் முடக்கப்படுமா யாழ்ப்பாணம்? பாதிப்பு நிலைமை தொடர்பில் மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

அதிகரிக்கும் கொரோனா தொற்றால் முடக்கப்படுமா யாழ்ப்பாணம்? பாதிப்பு நிலைமை தொடர்பில் மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் கானப்படுவதால்,  தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 1144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்தாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள . இதன் மூலம் தற்போது மொத்தமாக 1144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 26 தொற்றாளர்களும் மாவட்டத்தில் பரவலாக கானப்படுவதனால், ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்கி பயனில்லை என்பதனாலே உடுவில் பிரதேச முடக்கம் தளர்ப்பட்டுள்ளது.

ஆனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனோடு அருகிலுள்ள கடை தொகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்பட்டால் மாவட்டத்தை முடக்குவதாக இல்லையா என்பதை ஒருவர் தடுப்புச் செயல் அணியுடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post