பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மிகக்குறைந்தளவான பக்தர்கள் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இதில் கலந்துகொண்டனர்.
ஆலய வாயிலில் வைத்து பக்தர்களுக்கு தொற்றுநீக்கல் திரவம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பெயர்களும் பதிவுசெய்யப்பட்டன.
எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரதோற்சவமும் மறுநாள் திருவடிநிலையில் தீர்த்தோற்சவமும் ஞாயிற்றுக்கிழமை பூந்தண்டிகை உற்சவமும் நடைபெறும்.
50 பக்தர்களும் மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்றுகூடுவதை தவிர்த்து நேர ஒழுங்கின் அடிப்படையில் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுமாறு சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment