தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்! - Yarl Voice தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்! - Yarl Voice

தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!



தமிழர் பிரதேசங்களில் அரசாங்க திட்டங்கள் தமிழ் மொழியிலேயே அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தி்ல் இன்று(17.12.2020) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அரச அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரினால்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களிற்கான பெயர்கள் சிங்கள பெயர்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

குறித்த திட்டங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் சிங்கள பெயர்களிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக சுட்டிக்காட்டிய அமைச்சர்மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் போது குறித்த திட்டங்களின் பெயர்களை தமிழில் பயன்படுத்துமாறும் அதுதொடர்பாக மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post