யாழில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் - Yarl Voice யாழில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் - Yarl Voice

யாழில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட புரேவி புயல் யாழ்ப்பாணம் வடமராட்சியின் பல இடங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

குறிப்பாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த அதேவேளை புயல் காற்றினால் அங்குள்ள வீடுகள் கட்டிடங்கள் ஆலயங்கள் என பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில்
புயலினால் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை,கம்பர்மலை, பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடுகளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்டன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ,தவிசாளர் ஐங்கரன் ஆகியோரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதேவேளை தொண்டைமானாறு பகுதியில் உணவு இன்றி அவதியுற்ற 60 பேருக்கான மதிய உணவும், இரவு உணவும் அன்பர் ஒருவரின் நிதியுதவியில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post