வடக்கு மாகாண கல்வி அமைச்சிலும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை - Yarl Voice வடக்கு மாகாண கல்வி அமைச்சிலும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை - Yarl Voice

வடக்கு மாகாண கல்வி அமைச்சிலும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை
இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பு கூட்டம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக மண்டபத்திலும் அதிகாரிகள் மட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 

ராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தின்  யாழ் மாவட்ட  இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் நேற்று  யாழ் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது இதேபோன்று ஒரு கூட்டமே வடக்கு மாகாண கல்வி அமைச்சிலும் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், குறிப்பிட்ட பாடசாலை அதிபர்கள், அதிகாரிகள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பாடசாலை விலகிய மாணவர்கள் உட்பட அதிகாரிகள் கடேற் மூலம் இணையும் வசதி வாய்ப்புக்களுடன் இராணுவத்தினருக்கான சம்பளம், கொடுப்பனவு, மேலதிக வசதி வாய்ப்புக்களும் எடுத்தியம்ப்ப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டவர்கள் கடேற் தொடர்பான கலந்துரையாடல. என்றே அழைக்கப்பட்டோம் இராணுவததிிற்கான ஆட்சேர்ப்பிற்கான கூட்டம் என்பது பின்பே அறிந்து கொண்டோம் என்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post