இரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை - Yarl Voice இரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை - Yarl Voice

இரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை


 

தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் இரணைமடு பகுதியில் 60 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் மாங்குளம் மற்றும் கனகராயன் குளம் பிரதேசத்தில் 70 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதனால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18 அடியை அண்மித்துள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

கனகாம்பிகை குளம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளது அதன் கொள்ளளவு 10.6 அடி எனவே தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அதிகாலை வான்பாய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. 

எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், முதியவர்கள், மாற்றுவலுவுடையோர் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களை அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு முன்கூட்டியே தற்போதய கொரோணா சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post