வடக்கில் இன்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice வடக்கில் இன்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

வடக்கில் இன்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கும்  யாழ்ப்பாணம் மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் சங்கானை சேர்ந்த ஒருவருக்கும் ஆக பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post