யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளபடும் ஐ றோட் திட்ட வீதிகளை விரைவாக முடிக்குமாறு முதல்வர் கோரிக்கை - Yarl Voice யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளபடும் ஐ றோட் திட்ட வீதிகளை விரைவாக முடிக்குமாறு முதல்வர் கோரிக்கை - Yarl Voice

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளபடும் ஐ றோட் திட்ட வீதிகளை விரைவாக முடிக்குமாறு முதல்வர் கோரிக்கை
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் I Road திட்டம் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஐ றோட் பொறியிலாளர்கள் இத் திட்டத்தில் 17 வீதிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் அதில் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கை - அரசடி வீதி இணைப்பு வீதியில் ரயில்வே தடத்திற்கு அருகாமையில் வருகின்ற பகுதி இரயில்வே திணைக்களகத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் 
அதற்கான நிதி புங்கன்குளம் வீதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

அத்துடன் பிறவுண் வீதி, வைமன் வீதி,
றக்கா வீதி என்பன வடிகால் அமைப்புடன் செய்யப்படவுள்ளதாகவும் ஏனையவற்றில் இயற்கை நீரோட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீர் இணைப்பு வேலைகள் நடைபெறுகின்ற ஒழுங்கில் குறித்த 17 வீதிகளின் புனரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்தவகையில் தற்போது பிறவுண் வீதியில் குறித்த பணி நடைபெறுவதனால் அது முதலில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

வேலைகளை வெகுவிரைவாக ஒழுங்குபடுத்தி விரைவில் முடிக்குமாறும் 17 வீதிகளில் மக்களினால் அதிகளவில் பயன்படுத்தப்படும் வீதிகளை முன்னுரிமைப்படுத்தி அவ் ஒழுங்கில் வீதிகளைப் புனரமைக்குமாறும். அவ் வீதிகளின் முன்னுரிமைப்பட்டியலை தாம் தயாரித்து வழங்குவதாகவும் முதல்வர் தெரிவித்தார். 

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் உடனான இச் சந்திப்பில் I Road திட்டத்தின் வடமாகாண பொறியிலாளர், யாழ்.பகுதி பொறியிலாளர் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மாநகர பொறியிலாளர் சுரேஸ்குமார் மற்றும் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post