வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு இன்றைய தினம் Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வடக்கில் வவுனியா மாவட்டத்தில் மட்டும் 27 பேர் உட்பட மாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் மட்டும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment