“வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம் - Yarl Voice “வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம் - Yarl Voice

“வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம்
கொரோனா நோய்தொற்று காலப்பகுதியில் பலதுறைகள் பாதிக்கப்பட்டது போன்று நாடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்த சூழ்நிலையில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியை பயண்படுத்தும் என்னம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகி உள்ளது.

 இலங்கையை பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கிறது இந்த சூழ்நிலையில் தமிழ்நாடகங்களையும்  நிகழ்த்தமுடியாது  உள்ளது.

 அந்த வகையில்  நாடக உலகில் முதன் முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரிச்சாட்த முயற்சியை  யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் செயல்திறன்   அரங்க இயக்கம்நடாத்த உள்ளது.

  “வண்டியும் தொந்தியும் “நாடகம் சூம்  செயழிவழி அரங்கேற்ற  உள்ளது.  நகைச்சுவை பாங்கான இந்த நாடகம் நாளை    செவ்வாய் கிழமை  இரவு 7 மணிக்கு சூம் ஊடாக ( Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021  ) பார்வையிட முடியும். 

செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இதில் நடித்து உள்ளார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post