யாழ்ப்பாண மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் - Yarl Voice யாழ்ப்பாண மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் - Yarl Voice

யாழ்ப்பாண மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

யாழில்149.3   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது நேற்று காலையிலிருந்து தற்போது வரை  யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி

 மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும் வடபகுதியில்100மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்தார்
குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு கடல் தொழிலுக்குச் செல்வோர், தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post