மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது - Yarl Voice மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது - Yarl Voice

மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது






யாழ் மாவடத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் (12) காலை மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலகர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் மருதங்கேணி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Covid - 19 சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

இந்த கூட்டத்தொடரில் வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சனை, கால்நடை வளர்ப்பு தொடர்பாக, சமூக உட்கட்டமைப்பு தொடர்பாக, கல்வி,சுகாதாரம், விவசாயம்  தொடர்பாக என பல்வேறு விடயங்கள் சம்மந்தமாகவும் பல துறைகள் சம்மந்தமாகவும் கள்ளமண் ஏற்றல் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியிருந்தனர் அந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதனால் பணிப்பு விடுக்கப்பட்டது.

கடற் தொழிலில் ஈடுபடும் பிரதேச மக்களில் ஒருசிலரால் போதை கடத்தலில் ஈடுபடுகின்றனர் இதனால் பிரதேச மக்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது மேலும் பட்டி மாடுகளால் விவசாயத்தில் ஏற்படும் சேதங்கள் தொடர்பாகவும் குரங்குகள் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post