நீர்வேலியில் செல்லக் கதிர்காமத்தில் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல் - Yarl Voice நீர்வேலியில் செல்லக் கதிர்காமத்தில் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல் - Yarl Voice

நீர்வேலியில் செல்லக் கதிர்காமத்தில் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல்




நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை வெள்ளிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன. 

பிரம்மஸ்ரீ கு.தியாகராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பட்டிப்பொங்கலில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வட்டார உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா, கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், கால்நடைகளை வளர்ப்போர் எனப்பலரும் கலந்து கொண்டு மாடுகளைக் கௌரவித்தனர். 

சைவத்திற்கும் தமிழுக்கும் பேர் பெற்ற கிராமமான நீர்வேலியில் அமையப்பெற்றுள்ள நூற்றாண்டு வரலாற்றை கொண்ட செல்லக் கதிர்காமம் கோயிலில் வருடா வருடம் பட்டிப்பெங்கல் வெகு விமர்சையாக இடம்பெறுவது வழக்கமாகும். இம்முறை சுகாதார நியமங்களுக்கு மதிப்பளித்து மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் பட்டிப்பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. வழைச்செய்கைக்கு இலங்கையிலேயே முக்கியமான கிராமமாக அமையும் நீர்வேலி சவாரித்திடல் மற்றும் கூட்டுறவுப்பொருளாதார முறைமை எனப் பல்பரிமாணங்களை கொண்ட கிராமம் என்பது

0/Post a Comment/Comments

Previous Post Next Post