மண்டைதீவிலும் மண்கும்பாணிலும் மீண்டும் காணி சுவீகரிக்க நடவடிக்கை - எதிர்த்து போராட அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு - Yarl Voice மண்டைதீவிலும் மண்கும்பாணிலும் மீண்டும் காணி சுவீகரிக்க நடவடிக்கை - எதிர்த்து போராட அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு - Yarl Voice

மண்டைதீவிலும் மண்கும்பாணிலும் மீண்டும் காணி சுவீகரிக்க நடவடிக்கை - எதிர்த்து போராட அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். 
முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக எமது மக்களின் சொந்தக் காணிகள் தொடர்ச்சியாக சுவீகரிக்கப்படுகின்ற நிலமை நீடிக்கின்றது. கடந்த காவங்களிலும் மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய முற்பட்டபோது மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. எனினும் அதன் தொடர்ச்சியாக மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மக்களுடைய காணிகள் கடற்படையின் முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பு செய்வதற்காக அளவீடு செய்யப்படவுள்ளது. நாளை திங்கட்கிழமை மண்டைதீவிலும் மறுதினம் செவ்வாய்க்கிழமை மண்கும்பானிலும் அளவீடு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே எமது மக்களின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாளை காலை 8.30 மணிக்கு மண்டைதீவிலும் நாளை மறுதினம் காலை 8.30 மணிக்கு மண்கும்பானிலும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அணிதிரண்டு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post