இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இலங்கை கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவது தொடர்பாகஇ தமிழ்த் தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து கருத்துரைத்த போதேஇ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்இ தங்களைப் பொறுத்த வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களிலே மிகுந்த அக்கறை இருக்கின்றதென்றார்.
இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்குஇ தாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோமெனவும்இ அவர் கூறினார்.
இலங்கையின் பல இடங்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்இ இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் கூறினார்.
இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்குமெனவும்இ செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
Post a Comment