ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்! உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு - Yarl Voice ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்! உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு - Yarl Voice

ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்! உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு
யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரைப் போட்டியிட அனுமதித்தமை சட்டத் தவறு எனத் தெரிவித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.பற்றிக் டிரஞ்சனுக்கு தனது சட்டத்தரணி ஊடாக சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பியுள்ளார் யாழ் மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் முத்து முகம்மது நிபாகர்.

ஐக்கிய தமிழ் சட்ட நடவடிக்கைக் கவுன்ஸிலின் ஸ்தாபகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ்  செலஸ்ரின் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டத்தினால் 'பதவியை இராஜினாமாச் செய்தவர்' என வகைப்படுத்தப்பட்ட இமானுவேல் ஆனோல்ட்டை மீண்டும் தேர்வுக்கு அனுமதித்தமை சட்டத் தவறு -

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினரே மேயர் பதவிக்குப் போட்டியிடலாம் என்றுதான் சட்டம் கூறுகின்றது. பட்டியல் மூலம் மாநகர சபை உறுப்பினர்  நியமனம் பெற்ற மணிவண்ணனை இந்தப்  பதவித் தேர்வுக்கு அனுமதித்தமையும் சட்டத் தவறு -  

 என்பன உட்பட பல விடயங்கள் இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை, அவரது கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை உட்பட பல விடயங்கள் இக் கடித்தத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சட்டத்தவறை ஐந்து நாள்களுக்குள் திருத்தி மீளவும் சட்டத்துக்கு உட்பட்டு, சட்ட ரீதியான முறையில் புதிதாக மேயர் தெரிவை நடத்துமாறும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் இமானுவேல் ஆனோல்ட், மணிவண்ணன், யாழ் மாநகர சபை ஆணையாளர், பிரதி மேயர் து.ஈசன், யாழ் மாநகர சபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடக்கு ஆளுநர், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post