புதிய பேருந்து நிலைய தமிழ் மொழி சர்ச்சை தொடர்பில் முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை - Yarl Voice புதிய பேருந்து நிலைய தமிழ் மொழி சர்ச்சை தொடர்பில் முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை - Yarl Voice

புதிய பேருந்து நிலைய தமிழ் மொழி சர்ச்சை தொடர்பில் முதல்வர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கை
யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சில தினங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து தமிழ் மொழியை முன்னுரிமைப்படுத்தும் நடவடிக்கையில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, 

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலையம் கடந்த 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு, யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த பேரூந்து நிலைம் மாநகர சபையின் ஆளுகைக்குள் வரப்பட்டதை அடுத்து முதல்வரினால் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post