யாழ் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடமளிக்குமாறு அங்கஜன் பணிப்பு - Yarl Voice யாழ் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடமளிக்குமாறு அங்கஜன் பணிப்பு - Yarl Voice

யாழ் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடமளிக்குமாறு அங்கஜன் பணிப்பு
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  புதிதாக அமைக்கப்படு நாளையதினம் திறந்து வைக்கப்படவுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் அறுவுறுத்தல் பலகைகளில் தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்குமாறு உரிய தரப்பினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் பணிப்புரை விடுத்துள்ளார்.


யாழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்ற  போதே மேற்படி பணித்துள்ளார்.

 யாழில் புதிதாக அமைக்கபட்டு நாளையதினம் திறக்கப்படவுள்ள புதிய நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறுவுறுத்தல் பலகைகளில் தமிழ் மொழி இரண்டாவது இடத்தில் காணப்படுவதாக நிலவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருநதது.

இதனைத் தொடர்ந்து யாழ் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்கும் நிலை உருவாக்கப்படகூடாது என்ற நிலைப்பாட்டில் குறிப்பிட்ட பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்குமாறு ஒருங்கிணைப்புகுழு தீர்மானம் நிறைவேற்றி நகர அபிவிரித்தி திணைக்களத்திடம் நடைமுறைப்படுத்த பணித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post