இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம் - Yarl Voice இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம் - Yarl Voice

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்
இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை, விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் காப்ரேட் நிறுவனங்கள் அல்ல இந்திய மத்திய அரசே முடிவு செய், என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


.............

0/Post a Comment/Comments

Previous Post Next Post