பிசிஆர் பரிசோதனைக்கு அஞ்சாதீர் - பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் - மக்களிடம் சுகாதார திணைக்களம் வேண்டுகோள் - Yarl Voice பிசிஆர் பரிசோதனைக்கு அஞ்சாதீர் - பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் - மக்களிடம் சுகாதார திணைக்களம் வேண்டுகோள் - Yarl Voice

பிசிஆர் பரிசோதனைக்கு அஞ்சாதீர் - பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் - மக்களிடம் சுகாதார திணைக்களம் வேண்டுகோள்சமூகத்தில் கொரோனா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கோ அல்லது பீசீஆர் பரிசோதனைகளுக்கோ எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தவறான புரிதல்கள் அல்லது கற்பனையின் நிமித்தம் விபரீதமான முடிவுகளுக்கு செல்ல வேண்டாமென்றும் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் nhடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது..

கொரோனா தொற்று தீவிரமாக பரம்பலுள்ள பிரதேசங்களுக்கு சென்று வந்தால் அல்லது தொற்று அடையாளங் காணப்பட்டவருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்தால் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கறிப்பாக ஒருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவுடன் அந்த தொற்று சமூகத்திலுள்ள ஏனையவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்காக அவரோடு நேரடியாக தொடர்பில் இருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுகின்றனர். அவர்கள் இரு வாரங்கள் தனிமைப்படுத்துவதுண்டு. 
ஆனால் அவ்வாறு தனமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சமூகத்தில் பரவலாக திரிவதாகவும் பல்வேறுபட்ட நிகழ்விவுகளிலே கலந்து கொள்வதாகவும் எமக்கு முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றன. 

உண்மையில் பலருக்கு தொற்றை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து அவர்கள் அந்த பொறுப்போடு கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தொற்று நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

இதே வேளை கொரோனா தொற்று தீவிரமாக பரம்பலுள்ள பிரதேசங்களுக்கு நீங்கள் சென்று வந்தால் உங்களை நீங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பீசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் குடும்பத்திலே உங்கள் உறவினர்களுக்கு சமூகத்திலே இந்த தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த பீசீஅர் பரிசோதனை என்பது மிக எளிமையான சாதாரணமான ஒரு பரிசோதனையாகவே இருக்கின்றது.  அதற்கு எவரும் பயப்படவோ அச்சமடையவோ தேவையில்லை. இரண்டு வார காலத்திற்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பொறுப்புணர்வோடு நட்ந்து கொண்டால் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கொரோனா தொற்று என்பது பெரும்பாலானா சந்தர்ப்பங்களில் தொற்று நோய் அறிகுறி இல்லாமலே பலருக்கு நிறைவுக்கு வருகிறது. சிலருக்கு மட்டும் நோய் அறிகுறிகளுடன் நிறைவுக்கு வருகிறது. இதுவரைக்கும் வட மாகாணத்தில் இணங்காணப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் வடமாகாணத்தின் வவுனியாவிலே இறந்திருக்கின்றதை தவிர பெரும்பாலானவர்களுக்கு நோய் அறிகுறிகளுடன் எளிமையாக குணமாக வருகின்றார்கள்.

ஆயினும் சிலர் தவறான புரிதல் காரணமாக அதாவது தங்களுக்கு நோய் ஏற்பட்டால் பாராதூரமான விளைவு அல்லது இறப்பு ஏற்படுமென்ற அச்சம் வீண் பீதிகளைக் கொள்கின்றார்கள். இப்படியான விண் கற்பனைகளால் விபரீதமான முடிவுகளுக்கும் வந்திருக்கின்றனர். அது மிகவும் வேதனைக்கும் கவலைக்குமிரிய விடமாகம். 

எனவே பீசீஆர் பரிசோதனை என்பது அல்லது தனிமைப்படுத்தல் என்பது சமூகத்தில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையே தவிர எவரையும் புண்படுத்துவதற்காக மேற்கொள்ளவில்லை. 

எனவே மிக எளிமையான பரிசோதனை. இதன் மூலம் அவர்கள் தங்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் மற்றவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடியும். ஆகையினால் இதனை அறிந்து அல்லது உணர்ந்து கொண்டு விபரீதமான முடிவுகளுக்கு வராமல் உங்களை நிங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post