அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - Yarl Voice அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - Yarl Voice

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

எம்.ஜி.ஆர். என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி அ.தி.மு.க.இ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வார்த்து எடுக்கப்பட்டு இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிஇ துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது.

இவர்களின் பின்னால் இந்த இயக்கம் வலுவோடும்இ பொலிவோடும் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தலைமையில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்னைப்பற்றி சிறிதாக ஒரு செய்தி கிடைத்தால் அதைக்கூட ஊதி பெரிதாக்கி விடும் நடைமுறை சமூக ஊடகங்களால் பின்பற்றப்படுகிறது. டி.டி.வி. தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு. அவர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து தனிச்சின்னம் வாங்கியுள்ளார். அ.தி.மு.க.வுடன்இ அ.ம.மு.க. இணைவது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை.

வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கமல்ஹாசன் கட்சி நடத்தி வருகிறார். பிக்பாஸ் போன்று கட்சியை நடத்துகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும்இ தி.மு.க.வுக்கும்தான் போட்டி. இதில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கூட்டணி பற்றி முடிவு எடுக்க முதல்-அமைச்சருக்கும்இ துணை முதல்-அமைச்சருக்கும் பொதுக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் பயணித்து வருகிறோம்.

ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது தலைக்கு நேராக பலூன் தொங்கிக் கொண்டிருந்தது. போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான் பலூனை தட்டிவிட்டேன். அதனை மு.க.ஸ்டாலின் கேலி பேசி வருகிறார். பலூன் உடைப்பதில் தவறு இல்லை. தி.மு.க.வினர் போன்று யாருடைய பல்லையும் உடைத்தால்தான் தவறு.

தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி மீது எவ்வித வெறுப்பும் கிடையாது. முதல்-அமைச்சரும்இ துணை முதல்-அமைச்சரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இவர்கள் பிரசாரத்திற்கு மக்கள் அலைஅலையாக திரள்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமருவார். சிவகாசி உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளேன். மேலும் தொடர்ந்து மாவட்ட மக்களுக்காக நான் உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post