நாளைய ஹர்த்தாலுக்கு கடற்தொழிலாளர் சம்மேளனமும் ஆதரவு - Yarl Voice நாளைய ஹர்த்தாலுக்கு கடற்தொழிலாளர் சம்மேளனமும் ஆதரவு - Yarl Voice

நாளைய ஹர்த்தாலுக்கு கடற்தொழிலாளர் சம்மேளனமும் ஆதரவு
தமிழர் தாயகம் தழுவியதாக நாளை முன்னெடுக்கப்படவிருககும் கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் சம்மேளனம் முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழின அடக்குமுறை குறித்த செய்தியை சர்வதேச சமூகத்திற்கு ஒன்று பட்டு வெளிப்படுத்தும் வகையில் நாளைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தழுவியதான கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக் கதவடைப்பு போராட்டத்திற்கு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் சம்மேளனம் முழுமையான ஆதரவினை வழங்குவதென முடிவெடுத்திருப்பதாக அதன் செயலாளர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post