நாட்டில் சிறந்த அரசாங்கமும் இல்லை; பலமான எதிர்க்கட்சியும் இல்லை - நவீன் திஸாநாயக்க - Yarl Voice நாட்டில் சிறந்த அரசாங்கமும் இல்லை; பலமான எதிர்க்கட்சியும் இல்லை - நவீன் திஸாநாயக்க - Yarl Voice

நாட்டில் சிறந்த அரசாங்கமும் இல்லை; பலமான எதிர்க்கட்சியும் இல்லை - நவீன் திஸாநாயக்க


கட்சியின் பதவி நிலையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தினால் கட்சி அடைந்துள்ள பின்னடைவை  சீர்செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க கட்சியின் தலைமைத்துவம் தொடக்கம் அனைத்து மட்ட பதவி நிலைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனஇ கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எழுத்து மூலமாகப் பலமுறை தெரிவித்துள்ளேன் என்றார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதேஇ மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்..

 'ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டேன். கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படவில்லை. அதனால் வழங்கப்பட்ட தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்க முடியாது. நாட்டில் தற்போது சிறந்த அரசாங்கமும்  பலமான எதிர்க்கட்சியும் கிடையாது' என்றார். 

ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற அனைத்துத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று தெரிவித்த அவர்இ கட்சியின் உறுப்பினராகவும்இ செயற்குழுவின் உறுப்பினராகவும் செயற்படுவேன் என்றார். 

ஐக்கிய தேசிய கட்சி கடந்த வாரம் மறுசீரமைக்கப்பட்டு முக்கிய பதவிகளுக்கான புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. கட்சியின் பதவி நிலைகளில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தினால் கட்சி அடைந்துள்ள பின்னடைவைச்  சீர்செய்ய முடியாது எனத் தெரிவித்த அவர் கட்சியின் தலைமைத்துவம் தொடக்கம் அனைத்து மட்டப் பதவி நிலைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றார்.

'ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  குறுகிய காலத்துக்குள் மக்களின் வெறுப்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. நாட்டில் தற்போது சிறந்த அரசாங்கமும் இல்லை. பலமான எதிர்க்கட்சியும் இல்லை என நாட்டு மக்கள் கருதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இன்று  பலமான ஓர் எதிர்க்கட்சி அவசியமாகவுள்ளது' என்றார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸஇ ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறாமல் பொறுமையாகச் செயற்பட்டிருந்தால் அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கும் எனத் தெரிவித்த அவர்இ பொதுத் தேர்தலின் பின்னர்இ இரு தரப்பினரும் ஒன்றினைந்துஇ பலமான எதிர்க்கட்சியை ஸ்தாபித்திருக்கலாம்.

'ராஜபக்ஷர்களின் பலவீனமான அரசாங்கத்தைத் தோற்கடிக்கஇ அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகச் செயற்பட்டுஇ கட்சியை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். பலம் வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியைஇ நாட்டு மக்கள் புறக்கணிப்பதந்கான காரணம் என்னஇ தவறுகளை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்கள் குறித்துஇ ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post