500,000 கோவிட் - 19 தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது - அடுத்தவாரம் மேலும் 264,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் - Yarl Voice 500,000 கோவிட் - 19 தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது - அடுத்தவாரம் மேலும் 264,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் - Yarl Voice

500,000 கோவிட் - 19 தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது - அடுத்தவாரம் மேலும் 264,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்
500,000 கோவிட் - 19 தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அடுத்தவாரம் மேலும் 264,000 தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கப்பெறும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுமுடித்த முதன்மை நாடுகளில் எமது நாட்டையும் இணைந்த்துக் கொள்ளும் வேலைப்பாடுகளை நாம் சிறப்பாக முன்னெடுத்துள்ளோம். 

195 நாடுகளில் சுமார் 130 நாடுகள் இன்னும் கோவிட்-19 க்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை ஆனால் எமது நாட்டுக்கு அந்த நிலை ஏற்படவில்லை. ஜனாதிபதியின் வெளியுறவு கொள்கையால் எம்மால் தடுப்பூசிகளை வேண்டக்கூடிய சூழல் காணப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுமுடித்து, கொரோன தொடர்பான பயமற்ற சூழலை உருவாக்குவதுடன் சுற்றுலாத்துறையை முழுமையாக நடாத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான முனைப்புடன் நாம் செயல்பட்டு வருகிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post