உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துபாருங்கள்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடான சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் கருத்து - Yarl Voice உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துபாருங்கள்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடான சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் கருத்து - Yarl Voice

உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துபாருங்கள்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடான சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் கருத்து
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடான சந்திபொன்று குறித்து  டுவிட்டரில் பதிவு செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துபாருங்கள் என தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ள அமெரிக்க  தூதுவர் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளை கண்டுபிடிப்பதற்கான அவர்களின் பேராட்டம் குறித்து தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மகனை  அல்லது கணவரை இழப்பது குறித்து சிந்தித்து பாருங்கள்  அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாமலிருப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதுவே காணாமல்போனவர்களின உறவினர்களின் மனதை மிகவும் வேதனைப்படுத்தும் அனுபவம் என டுவிட்டரில் அலைனா டெப்பிளிட்ஸ் பதிவிட்டுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மதிக்கவேண்டும்,காயங்களை ஆற்றுவதற்னகாக  தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதிக்கவேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post