பொன்னாலையில் கால்கோள் விழா - Yarl Voice பொன்னாலையில் கால்கோள் விழா - Yarl Voice

பொன்னாலையில் கால்கோள் விழா
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை எளிமையாக நடைபெற்றது. 

பொன்னாலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளை தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு தரம் 2 மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

மாணவர்கள் பண்டிதர் பொன்னம்பலவாணர் ஐயாவிடம்  ஆசீர்வாதம் பெற்றனர்.

தொடர்ந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் வித்தியாபீடத்தில் கல்வித் தெய்வம் சரஸ்வதியை வணங்கி ஆசி பெற்றனர். 

பின்னர் பாடசாலை அரங்கில் ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post