யாழ் போதனாவில் வைத்தியரைத் தொடர்ந்துதாதியருக்கும் தொற்று - குழப்பத்தில் பணியாளர்கள் - Yarl Voice யாழ் போதனாவில் வைத்தியரைத் தொடர்ந்துதாதியருக்கும் தொற்று - குழப்பத்தில் பணியாளர்கள் - Yarl Voice

யாழ் போதனாவில் வைத்தியரைத் தொடர்ந்துதாதியருக்கும் தொற்று - குழப்பத்தில் பணியாளர்கள்யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நரம்பியல் வைத்திய நிபுணர் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த வைத்தியர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரதான தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில் வைத்தியசாலை முடக்கப்படுமா என்ற அச்சத்துடனான கேள்வி எழுந்திருக்கின்றது


0/Post a Comment/Comments

Previous Post Next Post