தரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி - பொதுமக்கள் விசனம் - Yarl Voice தரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி - பொதுமக்கள் விசனம் - Yarl Voice

தரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி - பொதுமக்கள் விசனம்பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அம்பனிலிருந்து மருதங்கேணி வரை அமைக்கப்பட்ட சுமார் 16 கிலோமீட்டர் வீதி  அமைத்து இன்னும் முழுமையாக நிறைவு  பெறாத நிலையில் பல்வேறு இடங்களிலும் மிக மோசமாக பழுதடைந்து வருகிறது. 

கடந்த 2016 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வீதி ஆறு மாதங்களில் நிறைவு பெற வேண்டிய நிலையிலும் இன்னும் முழுமை பெறாதுள்ளது. 

இந்நிலையிலேயே குறித்த வீதியில் பலவேறு இடங்களிலும் மிக மோசமாக பழுதடைந்து வருகிறது.

 குறித்த வீதி அமைப்பதற்க்கு பயன்படுத்தப்பட்ட காப்பெற் தரமற்றது என்றும் அமைக்கும் போது உரிய அமைப்பு பிரமாணங்கள் பின்பற்றப்படாமை, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கண்காணிக்கப்படாமை மற்றும் அரசு ஒப்நிபந்தித கார்ர்களுக்கு நிதி  வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் என்பனவே குறித்த வீதி மிக மோசமாக பழுதடைவதற்க்கும், அமைப்பு பணி இதுவரை நிறைவடையாத்தற்க்கும் காரணம் என அறிய முடியும்.

 அதே வேளை குறித்த காப்பெற் வீதியில் இடையிடையே பாரிய குன்றும் கிழியும் காணப்படுவதால் இரவு நேரங்களில் பல விபத்துக்கள ஏற்படுவதும் அ்அண்மை காலமாக அதிகரித்துவருகிறது.

குறித்த வீதி தொடர்பில் மாவட்ட செயலர், பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும், பல்வேறு தடவைகள் பலராலும் முறையீடு செய்யப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட காப்பெற் வீதியில் மருதங்கேணி பருத்தித்துறை வீதியிலேயே நீர் தேங்கி காணப்படுகிறது. அதேவேளை செம்பியன்பற்று பகுதியில் 1 கிலோமீட்டர் வீதி இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது குறிப்பிட தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post