மண்கும்பானில் கந்தூரி நிகழ்வு மற்றும் ஒன்று கூடலுக்கு பொலீஸாரினால் தடை - Yarl Voice மண்கும்பானில் கந்தூரி நிகழ்வு மற்றும் ஒன்று கூடலுக்கு பொலீஸாரினால் தடை - Yarl Voice

மண்கும்பானில் கந்தூரி நிகழ்வு மற்றும் ஒன்று கூடலுக்கு பொலீஸாரினால் தடை




யாழ்ப்பாணம் மண்கும்பான் வெள்ளக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலில் வருடா வருடம் இடம்பெறும் கந்தூரி நிகழ்வு இம்முறை நடைபெற மாட்டாது என்பதை சகலருக்கும் அறியத்தருகின்றோம். 

வழமை போன்று கந்தூரி வழங்களில் ஈடுபடும் குழுவினால் அண்மையில் யாழ்ப்பாணம் மண்கும்பான் பள்ளிவாசலில் கொடி ஏற்றப்பட்டது. நாளை 24.02.2021 ஆம் திகதி கொடி இறக்கப்படவுள்ளது. 

கொடி இறக்கும் நாள் வழமையாக வழங்கப்படும் கந்தூரி நிகழ்வுக்கு வேலனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் ஊர்காவற்றுறை பொலீஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்தூரி நிகழ்வு தடைசெய்யப்பட்டுள்ளமைக்கு காரணமாவது நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தாக்கம், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றல், தேவையற்று அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்டவையாகும். 

மேற்படி பொலீஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் பள்ளிவாசல் நிர்வாக சபையினால் இவ் அறிவித்தல் வெளியிடப்படுகின்றது. எனவே நாளை எவரும் தேவையற்று குறித்த பிரதேசத்தில் ஒன்று கூடுவதையோ, வருகை தருவதையோ முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

குறித்த அறிவித்தலை பொருட்படுத்தாது நடந்து கொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்புக் கூறாது என்பதுடன், துணை நிற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். 


வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்
தொடர்புகளுக்கு 
077 595 2261
077 345 4190

0/Post a Comment/Comments

Previous Post Next Post