யாழில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்க கோரிக்கை - Yarl Voice யாழில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்க கோரிக்கை - Yarl Voice

யாழில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்க கோரிக்கை




யாழ்ப்பாணத்தில் இந்திய அரசால்   அமைக்கப்பட்டுள்ள யாழ் கலாசார மண்டபத்தினை கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் இந்திய அரசினால் 100 கோடி ரூபா இந்திய நாணயத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

 இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடத்தினை பராமரிப்பதற்கு சில துறைசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியிலாளர்கள் உட்பட 60 வரையான பணியாளர்கள் தேவைப்படுவதோடு இந்த பணித் தொகுதிக்கு  கட்டிடத்தை அமைத்த இந்தியக் குழுவால் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு புதிய ஆளணியை நியமித்து அவர்களிற்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாட்டிற்கான காரணங்களால் அதிக காலதாமதம் ஏற்படலாம் எனவும் அதுவரை கொழும்பு  தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்க படையினர் இந்தியக் குழுவினரிடம் பயிற்சியை பெற்றுக்கொள்வார்கள் எனவும் மாநகர சபைக்கான நிரந்தர ஆளணி நியமிக்கும்போது அவர்களிற்கான பயிற்சியை படையினர் வழங்குவர. என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.கொடிகாரவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2021-01-26 ஆம் திகதிய கடிதம் மூலம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சாழ அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் பிரதி பிரதமரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாநகர முதல்வர், மாவட்டச் செயலாளர், மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post