இலங்கையில் அரசியல்கைதிகள் என எவரும் இல்லை – நீதியமைச்சர் - Yarl Voice இலங்கையில் அரசியல்கைதிகள் என எவரும் இல்லை – நீதியமைச்சர் - Yarl Voice

இலங்கையில் அரசியல்கைதிகள் என எவரும் இல்லை – நீதியமைச்சர்
இலங்கையில் அரசியல்கைதிகள் எவரும் இல்லையென அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
அரசியல்கைதிகள்  விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலிசப்ரி இலங்கையில் அரசியல்கைதிகள் என எவரும் இ;ல்லையென தெரிவித்தார்.

இதேவேளை சிறையில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத இன்னமும் வழக்குகள் நீடிக்கின்ற சிலர் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வழக்குகளை துரிதப்படுத்தவற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பிரதமநீதியரசருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post